மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று (ஜன.14) வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எட்டு சுற்றுகளாக வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் நான்காவது சுற்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென இரண்டு மாடுபிடி வீரர்கள் வேளாண் சட்டத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பி, கறுப்புக் கொடி காண்பித்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உடனடியாக ஓடி வந்து அவ்விரண்டு வீரர்களையும் களத்திலிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:தமிழ் கலாசாரம் மதிக்கப்பட வேண்டும் - ராகுல் காந்தி