ETV Bharat / state

திருப்பரங்குன்றத்தில் எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரை

author img

By

Published : Dec 6, 2020, 6:26 AM IST

மதுரை: திருப்பரங்குன்றத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தலைமையில், 22 வாகனங்கள் அணிவகுப்பில் வேல் யாத்திரை நடைபெற்றது.

l.murugan
l.murugan

பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி திருத்தணியில் வேல் யாத்திரையைத் தொடங்கினார். இந்த யாத்திரை டிசம்பர் 7ஆம் தேதி அன்று திருச்செந்தூரில் நிறைவடைகிறது. இந்நிலையில், நேற்று (டிச. 05) முருகனின் 6ஆவது படைவீடான மதுரை அழகர் கோயில் பகுதியில் உள்ள பழமுதிர்ச்சோலையில் எல். முருகன் தலைமையில் நடைபெற்றது.

நேற்று மாலை 7 மணிக்கு முருகனின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் 22 வாகனங்களின் அணிவகுப்பில் வந்து வேலுடன் சாமி தரிசனம்செய்தார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன்
தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன்

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "பாஜக சார்பில் தற்போது நடந்துவரும் வெற்றிவேல் யாத்திரையானது தமிழ்நாடு மக்களின் பேராதரவோடு வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. திட்டமிட்டபடி வேல் யாத்திரை நாளை மறுநாள் திருச்செந்தூரில் நிறைவுபெறும்" என்றார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வு ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.