ETV Bharat / state

'முரசொலி மூலப்பத்திரம் எங்கே?' - ஸ்டாலினை வழிமறித்த பாஜகவினர்! - ஸ்டாலின் காரை வழிமறித்த பாஜகவினர்

மதுரை: முரசொலி அலுவலக மூலப்பத்திரத்தை கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினை பாஜகவினர் முற்றுகையிட்டதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

BJP workers blocked Stalin's car
BJP workers blocked Stalin's car
author img

By

Published : Dec 22, 2019, 6:45 PM IST

மதுரை மூன்றுமாவடி பகுதியில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின் மதுரை வந்திருந்தார். இந்நிலையில், புதூர் அருகேயுள்ள கற்பக நகர் பகுதியின் சாலையில் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் சங்கர் பாண்டி உள்ளிட்ட பாஜகவினர், 'முரசொலி பத்திரம் எங்கே?' என்ற பதாகைகளுடன் ஸ்டாலினின் காரை முற்றுகையிட்டு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஸ்டாலின் வாகனத்தில் வந்திருந்த பாதுகாவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விலக்கினர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன், மாவட்ட செயலாளர் தளபதி ஆகியோருடன் திமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டனர்.

முரசொலி மூலப்பத்திரம் கேட்டு ஸ்டாலினை வழிமறித்த பாஜகவினர்!

அதற்குள் பாஜகவினர் கலைந்துசென்றனர். இந்த முற்றுகை சம்பவம் நடைபெற்ற பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘மாணவர்களை இழிவுபடுத்திய ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்’ - இந்திய மாணவர் சங்கம்!

Intro:*முரசொலி அலுவலக மூலப்பத்திரம் கோரி ஸ்டாலினை வழிமறித்த பாஜகவினரால் பரபரப்பு.*Body:முரசொலி அலுவலக மூலப்பத்திரம் கோரி ஸ்டாலினை வழிமறித்த பாஜகவினரால் பரபரப்பு.

மதுரை மூன்றுமாவடி பகுதியில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவிற்காக மதுரைக்கு வருகை தந்த திமுக தலைவர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதூர் அருகே உள்ள கற்பக நகர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பாஜக மாநில இளைஞரணி செயலாளர் சங்கர் பாண்டி தலைமையில் 5க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைகளில் முரசொலி பத்திரம் எங்கே என்ற பதாகைகளுடன் ஸ்டாலின் வந்த காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது அதனை தொடர்ந்து ஸ்டாலின் வாகனத்தில் வந்திருந்த பாதுகாவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விலகிச் சென்றனர் இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் மாவட்ட செயலாளர் தளபதி ஆகியோர் அந்த பகுதியில் திமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் வருகை தந்து கைகளில் ஆயுதங்களுடன் வருகை தந்தனர். இதனிடையே அந்த பகுதியில் போராடிய பாஜகவினர் அந்த பகுதியில் புறப்பட்டு சென்றதால் திமுகவினர் திரும்பி வந்தனர் சம்பவம் நடைபெற்ற பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.