நாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. கடந்த 40 நாள்களாக அமலில் உள்ள ஊரடங்கால் அனைத்து வணிகங்கள், போக்குவரத்துகள் ஸ்தம்பித்தும் ஏழை எளிய மக்கள் வருமானமற்று, உணவிற்கே திண்டாடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
![கோழிக்கறி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-07-bjp-chicken-script-7208110_05052020000608_0505f_1588617368_1046.png)
இதில் பாதிக்கப்படும் மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும் உதவிகளை வழங்கி வரும் நிலையில், பாஜகவினர் காய்கறி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுடன் வித்தியாசமான முயற்சியாக ஒரு கிலோ கோழிக் கறியும் சேர்த்து விநியோகித்து வருகின்றனர்
அக்கட்சியின் மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி, மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகே உள்ள சிறுதூரில் நடைபெற்றது. ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருள்களுடன் ஒரு கிலோ கோழிக்கறியும் வழங்கியது பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : முழு அடைப்பால், நாசிக் வெங்காய உற்பத்தி விவசாயிகள் கடும் பாதிப்பு!