ETV Bharat / state

Prison Bazaar: சிறைக் கைதிகளின் உற்பத்தி பொருள் அங்காடி - மதுரையில் பயோ-மெட்ரிக் வசதியுடன் தொடக்கம்! - prison bazar

சிறைக் கைதிகளின் உற்பத்தி பொருட்கள் விற்கப்படும் அங்காடியில், விற்பனை முறைகள், கணினிமயமாக்கப்பட்ட பயோமெட்ரிக் முறையை முதன் முறையாக மதுரை மத்திய சிறையில் தொடங்கப்பட்டுள்ளது.

சிறைக் கைதிகளின் உற்பத்தி பொருட்கள் அங்காடி

author img

By

Published : Jul 11, 2023, 7:06 AM IST

சிறைக் கைதிகளின் உற்பத்தி பொருட்கள் விற்கப்படும் அங்காடியில், விற்பனை முறைகள், கணினிமயமாக்கப்பட்ட பயோமெட்ரிக் முறையை முதன் முறையாக மதுரை மத்திய சிறையில் தொடங்கப்பட்டுள்ளது

மதுரை: மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்கும் அங்காடி, கணினி மயமாக்கப்பட்டு பயோ-மெட்ரிக் (Bio-metric) அடிப்படையில் பொருட்களின் விற்பனைகள் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறை மேலாண்மை திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக அனைத்து மத்திய சிறைகளிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. அதனை சென்னை சிறைத்துறை தலைமையகத்தில் உள்ள கட்டளை கண்காணிப்பு மையத்தில் இருந்து (Command Control Center) கண்காணிக்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளிலும் செயல்பட்டு வரும் சிறைவாசிகள் அங்காடிகள் (PCP Canteen) முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டு, பயோமெட்ரிக் அடிப்படையில் பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் தற்போது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை முதல் முறையாக கடந்த ஜூலை 3ஆம் தேதி அன்று புழல் மத்திய சிறையில் சிறைத்துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளிலும் விற்பனை செய்யப்படும் பொருட்கள் ஒரே விலையில் விற்பனை செய்யப்படும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறைவாசிகள் தங்களுக்குத் தேவையான பேஸ்ட், பிரஷ் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை சிறைவாசிகள் அங்காடிகள் மூலமாக தங்களது விரல் ரேகையினை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை மதுரை மத்திய சிறையிலும், பெண்கள் தனிச்சிறையிலும் நடைமுறைப்படுத்த தண்டனை சிறைவாசிகளின் விபரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், சோதனை அடிப்படையில் கடந்த ஒரு வார காலமாக ஆய்வு செய்யப்பட்டு, நேற்று முதல் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை மதுரை சரக சிறைத்துறை துணைத்தலைவர் பழனி மற்றும் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பரசுராமன் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர்.

இதன் மூலம் சிறைவாசிகளின் சொந்த பணக்கணக்கு விபரங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு, சிறைவாசிகள் தங்களது கணக்கு விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளிலும் சிறைவாசிகள் அங்காடிகள் மூலமாக விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஒரே வகையான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறைவாசிகள் தாங்கள் வாங்கிய பொருட்களுக்கான ரசீதை பெற்றுக் கொள்ளும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என சிறைத்துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதி இல்லை.. மனு அளிக்க வருவோரின் துயரம் தீருமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.