மதுரை: இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 03 குளிர்சாதனப் பெட்டிகள், 08 ஸ்லீப்பர் கோச்சுகள், 01 பேண்ட்ரி கார், 02 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலின் முதல் ஓட்டத்தில், IRCTC, தென் மண்டலம்/சென்னை சார்பில் 'ஷீரடி சாய் தரிசனம்'- என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான முதல் பயணம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி துவங்குகிறது. ஏழு பகல், 8 இரவுகள் என பயண நேரம் அமைய உள்ளது.
பார்வையிடும் இடங்கள் ஷீரடி, மந்திராலயம், நாசிக் (திரிம்பகேஷ்வர்) , பந்தர்பூர். கட்டணம்:
1. SL class: Rs. 13,950/-, 2. 3Ac class: Rs. 24,642/-
சிறப்பு பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
1. 3AC வகுப்பு/SL வகுப்பில் ரயில் பயணம்,
2. AC/NAC தங்குமிடம்,
3. உள்ளூரைப் பார்வையிடுவதற்கான போக்குவரத்து
4. தென்னிந்திய உணவு,
5. சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி,
இந்த ரயில் கொச்சுவேலி, கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் வழியாக ஷீரடி, மந்திராலயம், நாசிக் (திரிம்பகேஷ்வர்), பந்தர்பூர் செல்லும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு மற்றும் மேலும் தகவல் பெற விரும்புபவர்கள், கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை :9003140680/682
மதுரை : 8287932122,
திருச்சி : 8287932070,
கோயம்புத்தூர் : 9003140655 என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மாணவி நந்தினிக்கு இல்லம்தேடி சென்று கவிஞர் வைரமுத்து தங்கப்பேனா பரிசு!