உலகப் புகழ் வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் உள்ளன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவை அனைத்தையும் படி எடுக்கும் பணி தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
கல்வெட்டுகள் அனைத்தும் படி எடுக்கப்பட்டு அதில் உள்ள தகவல்கள் அனைவரும் அறியும் வண்ணம் இடம் பெறும் வகையில், 'மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டு' என்ற தலைப்பிலான நூல் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கத்தால் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
அக்குறிப்பிட்ட நூலில் கல்வெட்டுகளின் தரமான புகைப்படங்கள் இடம் பெறும் வகையில், தற்போது மீண்டும் படி எடுக்கும் பணி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தொடங்கியது. முன்னர் அறிக்கையாக தரப்பட்ட இந்த நூல் மீனாட்சி கோயில் நிர்வாகத்தால் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், கோயில் வளாகத்தில் உள்ள கல்வெட்டுக்களை பிரதியெடுத்து ஆய்வறிக்கையுடன் சேர்த்து வெளியிட முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு மூலம் பிரதியெடுக்கும் பணி கோயில் வளாகத்திற்குள் தொடங்கி அடுத்த 2 மாதத்திற்குள் நிறைவடையும் எனக் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி கோயிலில் அக்.7 முதல் அக்.15 வரை நவராத்திரி திருவிழா