ETV Bharat / state

கரோனா நிவாரண நிதிக்காக ரூ.10,000 வழங்கிய பிச்சைக்காரர்!

மதுரை: கரோனா நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கிய யாசகரை பொதுமக்கள் பாராட்டிவருகின்றனர்.

கரோனா நிவாரண நிதிக்காக பத்தாயிரம் ரூபாய் வழங்கிய பிச்சைக்காரர்

author img

By

Published : May 18, 2020, 2:12 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் யாசகர் பூல்பாண்டியன். இவர் இன்று கரோனா நிவாரண நிதிக்காக 10 ஆயிரம் ரூபாயை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று வழங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மதுரை வந்திருந்தேன். நடைபாதைகளில், சாலை ஓரங்களில் தங்கியிருந்த என்னைத் தன்னார்வலர்கள் மீட்டு மதுரை மாநகராட்சி சார்பாகத் தங்கவைத்தனர்.

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்காக என்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறிச்சந்தை, பழச்சந்தை, பூச்சந்தைகளில் பிச்சை எடுத்து கடந்த 15 நாள்களில் 10 ஆயிரம் ரூபாய் சேகரித்தேன்.

அந்தத் தொகையை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று வழங்கவிருக்கிறேன். இதனைத் தொடர்ந்து மேலும் 10 மாவட்டங்களில் இதுபோன்று பிச்சை எடுத்து தலா ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 10 ஆயிரம் ரூபாயை வழங்கத் திட்டமிட்டுள்ளேன். அதன் முதல்கட்டமாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று வழங்குகிறேன்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “கடந்த நாற்பதாண்டுகளாக நான் பிச்சை எடுக்கும் பணத்தில் பெரும்பகுதியை 400 பள்ளிகளுக்கும் மேல் நாற்காலி, மேசைகள், குடிநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வழங்கியுள்ளேன்.

தற்போது கரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்படுவது அறிந்து என்னால் இயன்ற உதவியை நிவாரணமாக வழங்கிவருகிறேன். மேலும் என்னால் இயன்ற பல்வேறு உதவிகளை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்குவேன்” என்றார்.

இதையும் படிங்க: நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி - தகுந்த இடைவெளியை பின்பற்றாத அதிமுகவினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.