ETV Bharat / state

'வள்ளுவரை பிரச்சனையாக்கி வெங்காய விலையை திசை திருப்பும் பாஜக'

மதுரை: வள்ளுவருக்கு காவி, ருத்ராட்சக் கொட்டையை அணிவித்து, அதனை பெரும் பிரச்சனையாக்கி, வெங்காயத்தின் விலையேற்றத்தை பாஜகவினர் திசை திருப்பியுள்ளனர் என்று முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி குற்றஞ்சாட்டினார்.

balabharathi
author img

By

Published : Nov 8, 2019, 11:45 AM IST

நவம்பர் புரட்சியை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணியில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி மதுரை வந்திருந்தார்.

அப்போது நமது ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், "தொழிலாளர்களுக்காக ரஷ்யாவில் நடைபெற்ற நவம்பர் புரட்சி, உலகத்திற்கே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தப் புரட்சியின் விளைவாகத்தான் உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் விடிவு காலம் பிறந்தது.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி

தமிழ்நாட்டில் பாரதியாரிலிருந்து, வ.உ.சி., திருவிக வரை இதனை யுகப்புரட்சியாகவே வர்ணித்தனர். அதன் நூற்றாண்டு விழாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது. இந்தியாவில் வரலாறு காணாத அளவில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை நூறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதனை திசை திருப்பவே பாஜக திட்டமிட்டு திருவள்ளுவருக்கு காவி அணிவித்து, ருத்திராட்சக் கொட்டைகள் அணிவித்து பிரச்சனையை பூதாகரமாக்கியுள்ளது. வள்ளுவர் குறித்து இளந்தலைமுறை குழந்தைகளிடத்தில் மாற்றுச் சிந்தனையை வளர்க்கும் நோக்கமும் இதில் அடங்கியுள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பாஜகவின் செல்லப்பிள்ளையாக அதிமுகவை அக்கட்சியின் தலைவர்களே மாற்றி வைத்திருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் குறித்தெல்லாம் இவர்களுக்கு கவலையில்லை. ஆர்எஸ்எஸ் என்னும் படுகுழிக்குள் அதிமுக வீழ்ந்து தனது அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறது" எனக் கடுமையாகச் சாடி பேசினார்.

இதையும் படிங்க: சாலையில் வீணாகச் செல்லும் தண்ணீரை சேமிக்க வேண்டும்!'

Intro:வள்ளுவரை பிரச்சனையாக்கி வெங்காய விலையை திசை திருப்பிவிட்டார்கள் - பாலபாரதி குற்றச்சாட்டு

வள்ளுவருக்கு காவி, ருத்ராட்சக் கொட்டையை அணிவித்து, அதனை பெரும் பிரச்சனையாக்கி, வெங்காயத்தின் விலையேற்றத்தை பாஜகவினர் திசை திருப்பி விட்டார்கள் என்று முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி குற்றம்சாட்டினர்.
Body:வள்ளுவரை பிரச்சனையாக்கி வெங்காய விலையை திசை திருப்பிவிட்டார்கள் - பாலபாரதி குற்றச்சாட்டு

வள்ளுவருக்கு காவி, ருத்ராட்சக் கொட்டையை அணிவித்து, அதனை பெரும் பிரச்சனையாக்கி, வெங்காயத்தின் விலையேற்றத்தை பாஜகவினர் திசை திருப்பி விட்டார்கள் என்று முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி குற்றம்சாட்டினர்.

நவம்பர் புரட்சியை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணியில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி மதுரை வந்திருந்தார்.

ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்காக பாலபாரதி சிறப்பு நேர்காணல் வழங்கியபோது, 'தொழிலாளர்களுக்காக ரஷ்யாவில் நடைபெற்ற நவம்பர் புரட்சி, உலகத்திற்கே பெரும் வழிகாட்டியாய் மாறியது. இந்தப் புரட்சியின் விளைவாகத்தான் உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் விடிவு காலம் பிறந்தது.

தமிழ்நாட்டின் மகாகவி பாரதியாரிலிருந்து, வ.உ.சி., திருவிக வரை இதனை யுகப்புரட்சியாகவே வர்ணித்தனர். அதன் நூற்றாண்டு விழாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், 'மத்தியில் ஆள்கின்ற பாஜக அரசு பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற மக்கள் விரோத திட்டங்களால் வேலையின்மைப் பிரச்சனைக்கும், சிறுதொழில்கள் நலிவுக்கும் காரணமாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் தொழில் நகரங்களாக திருப்பூர், கோவையிலுள்ள தொழில்கள் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களான, அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவற்றின் விலையேற்றத்தை இவர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை. மேலும் பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்குரிய பெரிய வெங்காயம் கிலோ நூறு ரூபாக்கு மேல் விற்கிறது.

இவற்றிலெல்லாம் மக்களின் கவனம் சென்றுவிடாத வண்ணம், திருவள்ளுவருக்கு காவி அணிவித்து, ருத்திராட்சக் கொட்டைகள் அணிவித்து பிரச்சனையை திசைதிருப்புகிறார்கள். வள்ளுவர் குறித்து இளந்தலைமுறை குழந்தைகளிடத்தில் மாற்றுச் சிந்தனையை வளர்க்கும் நோக்கமும் இதில் அடங்கியுள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது' என்றார்.

மேலும், 'தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக-வின் செல்லப்பிள்ளையாக அதிமுக-வை அக்கட்சியின் தலைவர்களே மாற்றி வைத்திருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருவதன் காரணமாக, ஒவ்வோராண்டும் மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடியை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்ற மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜனின் குற்றச்சாட்டு உண்மைதான்.

ஆனால் அவர்களுக்கு இது குறித்தெல்லாம் எந்தக் கவலையுமில்லை. ஆர்எஸ்எஸ் எனும் படுகுழிக்குள் அதிமுக வீழ்ந்து தனது அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறது' என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.