உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி மதுரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பொதுமக்கள் கூட்டத்தின் நடுவே நீந்திச் செல்லும் கள்ளழகர், அக்கூட்டத்தின் இடையில் புகுந்த 108 ஆம்புலன்சுக்கு வழி விட்டுச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
ஆம்புலன்ஸ்க்கு வழி விட்ட கள்ளழகர் - வீடியோ வைரல்
மதுரை: பக்தர்கள் வெள்ளத்தில் கள்ளழகர் சிலை ஊர்வலமாக வந்து கொண்டிருந்தபோது, ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட வீடியோ மதுரையில் வைரலாகி வருகிறது.
ஆம்புலன்ஸ்க்கு வழி விட்ட கள்ளழகர்
உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி மதுரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பொதுமக்கள் கூட்டத்தின் நடுவே நீந்திச் செல்லும் கள்ளழகர், அக்கூட்டத்தின் இடையில் புகுந்த 108 ஆம்புலன்சுக்கு வழி விட்டுச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
ஆம்புலன்சுக்கு வழி விட்ட கள்ளழகர் - வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி மதுரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதற்குப் பிறகு பொதுமக்கள் ஆர்ப்பாட்டமான கூட்டத்தின் நடுவே நீந்திச் செல்லும் கள்ளழகர், அக்கூட்டத்தின் இடையில் புகுந்த 108 ஆம்புலன்சுக்கு வழி விட்டுச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
கள்ளழகர் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி வைகையாற்றில் பச்சைப் பட்டுடுத்தி எழுந்தருளினார். பல லட்சக்கணக்கான மக்கள் 'கோவிந்தா' கோஷம் எழுப்பி கள்ளழகரைத் தரிசித்தனர். பிறகு ராமராயர் மண்டபத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சிக்குப் பிறகு, வண்டியூர் நோக்கிப் புறப்பட்ட கள்ளழகர், அண்ணாநகர் குருவிக்காரன் சாலை பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
இதனை சற்றும் எதிர்பாராத காவலர்கள் உடனடியாக கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். சாலையை மறித்தவாறு சென்று கொண்டிருந்த கள்ளழகரும் உடனடியாக, சற்றே பின்வாங்கி சாலையின் ஓரம் ஒதுங்கி நின்றபிறகு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் சைரன் சத்தத்துடன் அவ்விடத்தைக் கடந்து சென்றது.
இந்த வீடியோ தற்போது வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
(இதற்குரிய வீடியோவை TN_MDU_03_24_AZHAGAR_AMBULANCE_VIRAL_VISUAL_9025391 என்ற பெயரில் எஃப்டிபி-இல் அனுப்பியுள்ளேன்)