மதுரை மாநகரின் மையப்பகுதியில் ஓடக்கூடிய வைகை ஆற்றின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் 1886ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஏவி மேம்பாலம் சுமார் 133 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இப்பாலத்தில் தற்போது செடிகள் வளர்ந்து முறையான பராமரிப்பின்றி காணபட்டது. பாலத்தை முறையாக பராமரிக்க வேண்டும்மென்று நெடுஞ்சாலைத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கைவைத்தனர்.
இதனையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் இந்தப் பாலத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் முதல்கட்ட மராமத்துப் பணியாக வர்ணங்கள் பூசும் பணியை தொடங்கியுள்ளனர்.
இந்தப் பணியானது இரண்டு மாத காலங்களில் முடிவடையும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.