ETV Bharat / state

சிசிடிவி.. மதுரையில் உணவக ஊழியர்கள் மீது தாக்குதல்

மதுரை ஒத்தக்கடையில் பிரபல ஹோட்டலின் ஊழியர்கள் மீது கத்தி மற்றும் உருட்டு கட்டையால் தாக்குதல் சிசிடிவி பதிவுகளை கொண்டு ஒத்தக்கடை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவக ஊழியர்கள் மீது கத்தி மற்றும் உருட்டு கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சிகள்

author img

By

Published : Aug 14, 2022, 9:52 PM IST

மதுரை: ஒத்தக்கடையில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் இரவில் புகுந்த மர்மநபர்கள் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், கத்தி மற்றும் உருட்டு கட்டைகளை கொண்டு ஹோட்டலில் காசாளர் ரமேஷ் மற்றும் ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து உணவக உரிமையாளர் ரஹமத்துல்லா மற்றும் காசாளர் ரமேஷ் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஒத்தக்கடை காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிசிடிவி

இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது ஓட்டலில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் குழந்தைகளுடன் தப்பிச்செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க:எகிப்து நாட்டிலுள்ள தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.