மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியைச் சேர்ந்தவர் திரவியம். இவர் கட்டட ஒப்பந்ததாரராக பணி செய்துவருகிறார்.
தற்போது திரவியம் மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளர் மாதவன் என்பவருக்கு வீடு கட்டி வருகிறார். தினமும் கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த இருப்பு தகடுகள் காணாமல் போயுள்ளன. இதுகுறித்து திரவியம் எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்ற இளைஞர் இருப்பு கம்பிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் மது அருந்த பணம் இல்லாததால் இரும்பு தகடுகளை திருடிச்சென்றதாக கூறியுள்ளார். பின்னர் பார்த்திபனை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து 25க்கும் மேற்பட்ட இரும்பு தகடுகளை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: வனப்பகுதியில் மணல் அள்ளுவது குறித்து மதுரை, திண்டுக்கல் ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு