மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் நடைபெற்ற கட்சி பிரமுகர் விழாவில் கலந்துகொண்ட பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
’நெல்லை கண்ணன் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியது கண்டிக்கத்தக்கது. அவரை கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின், மோடி ஃபோபியா என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மோடி எதை செய்தாலும் குறை கூறிக்கொண்டே இருப்பார்.
ஈழத் தமிழர்கள் இலங்கையில் சென்று குடியேறுவதே தமிழ்நாடு பாஜகவிற்கு மகிழ்ச்சி. சுமார் ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுத்துவிட்டால் இலங்கையில் அவர்களது குடியுரிமை பறிபோய்விடும். இலங்கையில் ஆளும் சிங்களர்கள் அங்கு தமிழர்கள் குறைவதையே விரும்புகின்றனர். திமுக சார்பில் கோலமிடும் போட்டி தொடங்கியுள்ளனர். பின்னர் திமுகவினர் அலங்கோலமாகிவிடுவர்’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மங்களகரமான கோலத்தை அலங்கோலப்படுத்தும் திமுக - அமைச்சர் குற்றச்சாட்டு