மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழியில் ஒளிபரப்புக்கு தடை விதிக்கக் கோரி முறையீட்டார்.
அப்போது, பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்க வேண்டும் எனவும், வாராவாரம் சனிக்கிழமை 15 நிமிடங்களை வாராந்திர செய்தித்தொகுப்பிற்கு ஒதுக்கவேண்டுமெனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழுக்கு பிரத்யேகமாக செயல்படும் பொதிகை போன்ற தொலைக்காட்சிகளில் சமஸ்கிருதத்தை திணிப்பது எந்த வகையில் நியாயம் என முறையீட்டு வாதிட்டார்.
இந்த விவகாரம் குறித்து மனுவாக தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க...அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை - நீதிமன்றத்தில் அரசு உறுதி!