ETV Bharat / state

தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மதுரை: கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

An increase in the number of people returning home after recovering from corona
குறையத் தொடங்கும் கரோனா பாதிப்பு
author img

By

Published : Aug 25, 2020, 2:07 AM IST

மதுரையில் கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் தொடங்கிய கரோனா தொற்று மே, ஜூன் மாதங்களில் கடுமையாக அதிகரித்தது. தற்போது ஜூன் இறுதி வாரத்திலிருந்து தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளது. மதுரையில் தற்போது வரை கரோனாவால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை காட்டிலும், குணமடைந்து வீட்டிற்கு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மதுரையில் கரோனா தொற்று காரணமாக நேற்று (ஆகஸ்ட் 24) புதிதாக 74 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 68 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, சிகிச்சைப் பலனின்றி மூவர் உயிரிழத்தனர்.

மதுரையில் மட்டும் இதுவரை 13 ஆயிரத்து 508 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 12 ஆயிரத்து 191 பேர் முழுவதுமாக குணமடைந்துள்ளனர். தற்போது 979 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 338 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பிளாஸ்மா தானம் மூலமாக 7 பேர் இதுவரை குணமாகியுள்ளனர்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான நபர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக தற்போது தொற்று பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை நகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.