ETV Bharat / state

April Fool-ஐ மரக்கன்றுகள் வழங்கி April Cool ஆக்கிய பசுமை நண்பர்கள்!

author img

By

Published : Apr 1, 2019, 3:28 PM IST

Updated : Apr 2, 2019, 7:31 AM IST

மதுரை: பசுமை நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாணவ மாணவியருக்கு மரக்கன்றுகளை வழங்கி ஏப்ரல் ஃபூல் தினத்தை ஏப்ரல் கூல் தினமாக மாற்றியுள்ளனர்.

பசுமை நண்பர்கள்

மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் 'பசுமை நண்பர்கள்' என்னும் தன்னார்வ அமைப்பைச் சார்ந்தவர்கள் ஏப்ரல் ஃபூல் தினத்தை கூல் தினமாக அறிவித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினர்.

கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மா, பலா, கொய்யா, கொன்றை, அரசமரம், வேம்பு போன்ற மரக்கன்றுகளை பசுமை நண்பர்கள் வழங்கினர்.

இதனையடுத்து பசுமை நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொன்குமார் கூறியதாவது, "சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளில் மாணவ, மாணவியருக்கு அக்கறை உருவாக வேண்டும். உலக முட்டாள்கள் தினமான ஏப்ரல் ஒன்றாம் தேதியை மாற்றி ஏப்ரல் கூல் என்னும் பசுமை தினமாக கொண்டாட முயற்சி செய்து மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடுகிறோம்.

மதுரையைச் சுற்றியுள்ள அமெரிக்கன் கல்லூரி, மீனாட்சி மகளிர் கலைக் கல்லூரி மற்றும் 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இன்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் மதிப்பு ஏறக்குறைய இரண்டு லட்சம் ஆகும். இந்த ஆண்டு முழுவதும் பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சமூக ஆர்வலர் லயா, 'சுற்றுச்சூழல் சீரழிந்து வருவதால் நல்ல காற்றையும் நல்ல குடிநீரையும் தேடி அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது கேலியாக பார்த்தோம். ஆனால் இன்றைக்கு நாம் தண்ணீரை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். இளைஞர்கள் ஒன்றிணைந்து இயற்கையை காக்க வேண்டும்' என்றார்.

Intro:ஏப்ரல் ஃபூல் தினத்தை ஏப்ரல் கூல் தினமாக மாற்றி பசுமை மதுரை உருவாக்கம் கனவோடு தன்னார்வலர்கள் பசுமை நண்பர்களாக இன்று ஒருங்கிணைந்து மாணவ மாணவியருக்கு மரக்கன்றுகளை வழங்கினர்

Body:மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் பசுமை நண்பர்கள் என்ற தன்னார்வ அமைப்பின் வாயிலாக ஏப்ரல் ஃபூல் தினமான இன்று ஏப்ரல் கூல் தினமாக அறிவித்து பல்வேறு வகையான மரக் கன்றுகளை மாணவ மாணவியருக்கு என்று வழங்கினர்

மா பலா கொய்யா உள்ளிட்ட கனிவகைகளும் கொன்ற அரசு வேம்பு உள்ளிட்ட நிழல் தரும் மரங்களின் கன்றுகளை மாணவ மாணவிகளுக்கு பசுமை நண்பர்கள் வழங்கினர்

அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொன் குமார் பேசுகையில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளில் மாணவ மாணவியருக்கு அக்கறை உருவாக வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு உலக முட்டாள்கள் தினமாக ஏப்ரல் ஒன்றாம் தேதியை அனுசரித்து வரும் நிலையில் அதனை மாற்றி ஏப்ரல் கூல் கூல் எனும் பசுமை தினமாக கொண்டாட வேண்டும் எனும் அடிப்படையில் இந்த நாளை மரக்கன்றுகள் வழங்கி நாங்கள் கொண்டாடுகிறோம்

மதுரை அமெரிக்கன் கல்லூரி மீனாட்சி மகளிர் கலைக் கல்லூரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இன்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன இவற்றின் மதிப்பு ஏறக்குறைய இரண்டு லட்சம் ஆகும் எங்களது பசுமை நண்பர்கள் தன்னார்வ குழுவினர் மூலமாக இந்த தொகை வசூல் செய்யப்பட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்த வேண்டும் மதுரையின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை நாங்கள் செய்துள்ளோம் இன்றைக்கு மட்டுமன்றி இந்த ஆண்டு முழுவதும் பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நாங்கள் வழங்கி வருகிறோம் என்றார்

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திண்டுக்கல்லைச் சேர்ந்த சமூக ஆர்வலர் லயா கூறுகையில் பல்வேறு வகையிலும் நமது சுற்றுச் சூழல் சீரழிந்து வரும் நிலையில் நல்ல காற்றும் நல்ல குடிநீரும் இன்றைக்கு மிக அவசியமான ஒன்று ஒரு காலத்தில் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது கேலியாக பார்த்தோம் ஆனால் இன்றைக்கு நாம் தண்ணீரை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம் அதேபோன்று தூய காற்றை விலை கொடுத்து வாங்குவது சூழல் தற்போது உருவாகியுள்ளது இதையெல்லாம் மாற்ற வேண்டும் ஆனால் அது இளைஞர்கள் கையில் தான் உள்ளது பசுமை நண்பர்கள் போன்று அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இளைஞர் குழுக்கள் ஒன்றிணைந்து இது போன்ற சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு பணி செய்ய வேண்டும் என்றார்

Conclusion:
Last Updated : Apr 2, 2019, 7:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.