அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் துணைத்தலைவரும், தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளருமான பி.வி. கதிரவன் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், “கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு மதிப்பளிக்கமால் கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்படுகின்றனர்.
வருகின்ற இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எங்களுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறோம். வருகின்ற 10ஆம் தேதிக்கு மேல் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை செய்யவுள்ளோம். வருகின்ற தேவர் ஜெயந்திக்கு நீதிமன்ற உத்தரவை மதித்து பேனர்கள் வைக்கமாட்டோம். மேலும், மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை வைக்க பிரதமரை சந்தித்து மனு அளிக்க இருக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரி கொள்ளையர்களைத் துரத்திப் பிடித்த போலீஸ்: வெளியான சிசிடிவி வீடியோ!