ETV Bharat / state

தென்தாமரைகுளம் நாராயணசுவாமி திருக்கோயிலில் அகிலத்திரட்டு அம்மானைச் சுவடிகள் கண்டுபிடிப்பு! - ஐயா வைகுண்டர் யார்

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளத்தில் உள்ள அருள்மிகு நாராயணசுவாமி திருக்கோயிலில் அகிலத்திரட்டு அம்மானைச் சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஐயா வைகுண்டரின் வாழ்வையும், அருள்வாக்கையும் பற்றி குறிப்புகளை கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

kumari
தென்தாமரைகுளம்
author img

By

Published : Apr 26, 2023, 4:43 PM IST

மதுரை: இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் இருக்கின்ற அரிய ஓலைச்சுவடிகளையும், செப்புப்பட்டயங்களையும் அடையாளம் கண்டு பராமரித்துப் பாதுகாக்கவும், அட்டவணைப்படுத்தி நூலாக்கம் செய்யவும், 12 பேர் கொண்ட 'சுவடித் திட்டப் பணிக்குழு' நியமிக்கப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சுவடித் திட்டப் பணிக்குழுவினர் திருக்கோயில்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சுவடித் திட்டப் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் தாமரைப்பாண்டியன்

இந்த கள ஆய்வுகள் குறித்து சுவடித் திட்டப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் தாமரைப்பாண்டியன் கூறுகையில், "தமிழர் வரலாற்றை மீட்டெடுக்க உருவாக்கிய சுவடித் திட்டப் பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். அதன்படி, இதுவரை 207 திருக்கோயில்களில் கள ஆய்வு செய்து 1 லட்சத்து 80 ஆயிரத்து 247 சுருணை ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுருணை ஏடுகளில் நில ஆவணக் குறிப்புகள், குத்தகை முறைகள், கோயில் திருவிழாக்கள், ஆபரணங்கள், தெய்வ வாகனங்கள், கோயில் அலுவல் குறிப்புகள், பூஜை முறைகள், வரவு செலவு குறிப்புகள், மன்னர் குறிப்புகள், காலக் குறிப்புகள் முதலிய பல்வேறு செய்திகள் காணப்படுகின்றன.

அதுபோல 348 இலக்கியச் சுவடிக் கட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இலக்கியச் சுவடிகள் தமிழ், தெலுங்கு மொழியிலும் கிரந்த எழுத்து வடிவிலும் கிடைக்கின்றன. கிரந்த எழுத்து வடிவில் அதிகமான இலக்கியச் சுவடிகள் கிடைக்கின்றன. மேலும், 26 பழமையான செப்புப் பட்டயங்கள், 5 தாள் சுவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட ஓலைச் சுவடிகளைப் பராமரித்து பாதுகாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுவரை 45 ஆயிரத்து 510 ஏடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஓலைச்சுவடிகளை நூலாக்கும் பணியினை விரைவுபடுத்திட இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் கே.வி.முரளிதரன், கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் மாந்துறை ஷேத்திர மான்மியம், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் சுருணை ஆவணங்கள், அகிலாண்டேஸ்வரி தோத்திரம், சம்புலிங்கமாலை ஆகியவை நூல்களாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பதிப்பாசிரியர் முனைவர் ஜெ.சசிக்குமார் பதிப்புப் பணிக்கான முன்னெடுப்பைச் செய்து வருகிறார்.

அகிலத்திரட்டு அம்மானைச் சுவடிகள்
அகிலத்திரட்டு அம்மானைச் சுவடிகள்

இந்நிலையில் குமரி மாவட்டம், தென்தாமரைகுளம் ஊரில் அமைந்துள்ள அருள்மிகு நாராயணசுவாமி திருக்கோயிலில் சுவடித் திரட்டுநர் மா.பாலசுப்பிரமணியன், கு.பிரகாஷ் குமார் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். கள ஆய்வில் அகிலத் திரட்டு அம்மானைச் சுவடி ஒன்று கண்டறியப்பட்டது. அகிலத் திரட்டு அம்மானைச் சுவடியைப் படியெடுத்தவர் நரியன் விளை ச.திருமால் நாடார் மகன் த.சுதர்சனன் என்ற குறிப்பு சுவடியில் காணப்படுகிறது. சுவடி படி எடுக்கப்பட்ட காலம் கி.பி. 1977 -ஆம் ஆண்டு என்ற குறிப்பு உள்ளது.

'அகிலத் திரட்டு அம்மானை' ஐயா வைகுண்டரின் வாழ்வையும், அருள்வாக்கையும் எடுத்துரைக்கிறது. ஐயா வைகுண்டர் 19ஆம் நூற்றாண்டில் சமூகப் புரட்சி செய்தவர். அவரின் வரலாற்றைப் பேசும் அகிலத் திரட்டு அம்மானை கி.பி. 1939 -ஆம் ஆண்டே பதிப்பாகி வெளிவந்துள்ளது. எனினும் தற்பொழுது கிடைத்துள்ள சுவடி நல்ல நிலையில் முழுமையாக உள்ளதால் மூல பாட பதிப்பிற்கு உதவும் என்பதன் அடிப்படையில் பராமரித்து பாதுகாக்கவும், புகைப்பட நகலி எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: கோயில் கருவறை தெய்வங்களை வீட்டின் கருவறைக்கு கொண்டு வந்த கொண்டைய ராஜூ.. சென்னையில் 'சித்ராலயம்' ஓவியக் கண்காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.