ETV Bharat / state

’இரண்டு தலைமையின் கீழ் அதிமுக வெற்றி நடைபோடுகிறது’ - செல்லூர் ராஜு

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் திரைப்படங்களைப் போல, இரண்டு தலைமையின் கீழ் அதிமுக வெற்றி நடைபோடுவதாக சட்டப்பேரவை உறுப்பினர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

aiadmk
aiadmk
author img

By

Published : Jun 20, 2021, 7:56 AM IST

மதுரை: கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அக்கட்சி வக்கீல் பிரிவை சேர்ந்தவர்களுடன் மதுரை மாநகர் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் ராஜு நேற்று (ஜூன்.19) ஆலோசனை நடத்தினார்.

திமுக மீது விமர்சனம்

அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய செல்லூர் ராஜு, ”தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட எல்லா பாதிப்பும் திமுக ஆட்சியில்தான் நடந்தது. கச்சத்தீவு, ஸ்டெர்லைட், முல்லை பெரியாறு, காவிரி உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு திமுக தான் காரணம்.

ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், தற்போது நீட் தேர்வுக்கு தயாராக சொல்கின்றனர்.

மேகதாது அணை

மக்களிடம் பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி திமுக மட்டும் தான். இன்று உரிமைக்கு குரல் கொடுப்போம் என்கிறார் ஸ்டாலின். ஆனால் அதிமுக, மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்த்து ஒன்றிய அரசுடன் போராடி இருக்கிறது.

’அடிமை அரசு’ என்று விமர்சித்த ஸ்டாலின் டெல்லி சென்று என்ன சாதித்துள்ளார்? ’கோ பேக் மோடி’ என்று திமுக சொன்னாலும், அவரை மரியாதையுடன் நடத்தி இருக்கிறார் மோடி.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு அதிமுக ஆட்சியில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் பெரிய வெற்றி பெற்றன.

உள்ளாட்சித் தேர்தல்

அதிமுக கட்சிக்குள் பிளவுப்படுத்தும் வேலைகளை பலரும் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இரண்டு தலைவர்களின் கீழ் அதிமுக வெற்றி நடை போடுகிறது.

அதிமுக ஆட்சியில் பல மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால், திமுக எத்தனை கடைகளை அடைத்துள்ளது? உள்ளாட்சித் தேர்தல் வரைக்கும் தான் திமுக கூட்டணி நீடிக்கும், அதன் பிறகு மதிமுக, கம்யூனிஸ்ட் எல்லோரும் பிரிந்து விடுவார்கள்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாடகம்?

சட்டப்பேரவையில் ஸ்டாலின் போல சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்து நாடகம் போட மாட்டோம். உண்மையாகவே எங்களுடைய எதிர்ப்புகளை ஆக்கப்பூர்வமாக சபைக்கு உள்ளே விவாதம் செய்வோம்” என்றார்.

இதையும் படிங்க: சசிகலாவுக்கு எதிராக சூளுரை: அதிமுகவினர் தீர்மானம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.