ETV Bharat / state

நெருங்கும் இடைத்தேர்தல்: பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுகவினர் அதிரடி கைது! - சிறை

மதுரை: இடைத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட நான்கு அதிமுகவினரை தேர்தல் பறக்கும்படையினர் கையும் களவுமாக பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைது
author img

By

Published : May 15, 2019, 3:09 PM IST

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ள. தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்கவும், பரிசுப்பொருட்கள் வழங்குவதைத் தடுக்கவும் தனிக்குழுக்கள் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயன்ற அதிமுகவைச் சேர்ந்த தமிழரசன், முத்துமணி, சிவக்குமார், ராமசாமி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் கைது

மேலும், இவர்களிடமிருந்து பணப்பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ.74 ஆயிரத்தினைப் பறிமுதல் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பறக்கும் படையினரின் இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Intro:வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினர் 4 பேர் கைது 74 ஆயிரம் ரூபாய் பறிமுதல்

Body:மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் இன்று வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நான்கு அதிமுகவினரை மதுரை வில்லாபுரம் போலீசார் கைது செய்துள்ளனர் மேலும் சோதனையில் ஈடுபட்ட தேர்தல் தனிப் படை அலுவலர்கள் அவரிடமிருந்த ரூபாய் 74 ஆயிரத்து பறிமுதல் செய்து செய்தனர்

மதுரை வில்லாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயன்ற அதிமுகவினர் தமிழரசன் முத்துமணி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த சிவக்குமார் ராமசாமி ஆகியோரை கைது செய்தனர் அவர்கள் வில்லாபுரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் பிறகு அவரிடம் இருந்த ரூபாய் 74 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் பல்வேறு கட்சிகளின் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்து வரும் நிலையில் ஆளும் கட்சியான அதிமுக வின் பணப்பட்டுவாடா சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.