ETV Bharat / state

அமைதி காக்கும் பணியில் காவலர்களின் பங்களிப்பு முக்கியமானது - ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் - Role of the Police

மதுரை : அமைதி காக்கும் பணியில் காவலர்களின் பங்களிப்பு முக்கியமானது என ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்துள்ளார்.

ADGP Davidson Devavasirvatham
ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்
author img

By

Published : Feb 25, 2020, 11:47 AM IST

மதுரை மாநகர் காவல் ஆணையரான டேவிட்சன் தேவாசீர்வாதம் கூடுதல் டிஜிபி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதற்கு முன்பாக மதுரை மாநகர் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் கஞ்சா ஒழிப்பு, விபத்துக்களைக் குறைப்பது, சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள பதவி உயர்வு அவரின் பணியை இன்னும் மேம்பட செய்யும் என பேசப்படுகிறது.

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கலந்துரையாடல்

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவல் துறையின் பொதுவான பணியே அமைதி காப்புதான்.

அமைதி காக்கும் பணியில் காவலர்களின் பங்களிப்பு முக்கியமானது. சேஃப்டி, செக்யூரிட்டி, புரொடக்ஷன் என்ற மூன்றும்தான் காவல் துறையின் தாரக மந்திரம். அமைதி மற்றும் வெளிப்படைத் தன்மை என்பது காவல் துறையின் பணிகளில் இன்றியமையாத ஒன்று. அதனை சரியான முறையில் தக்க வைப்பதற்கு காட்சிக் காவல் பணியும் அவசியம். விரைவுத்தன்மை மற்றொரு அம்சமும்கூட.

அமைதி காப்பது என்பதும்கூட, அந்த அமைதியை நிலைநாட்டுவதற்கான சார்பு செயல்களுடன் கூடியதாகும். சில குறிப்பிட்ட குற்றம் சார்ந்த விசயங்களில் காவல் துறையின் இருப்பை மட்டுமன்றி, தெரிவுப்படுத்தல் மற்றும் அமலாக்கம் செய்வதில் கூடுதல் அக்கறையும் அவசியம் எனக் கருதுகிறேன். இது போன்ற விஷயங்களில் காவல் துறையின் பங்களிப்பை தொடர்ந்து உறுதி செய்வதே காவல் காப்புப் பணியாக இருக்க முடியும்' என்றார்.

இதையும் படிங்க: ஊதிய உயர்வு விவகாரம் தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.