ETV Bharat / state

"நீ, நான் என்ற வேறுபாடு கிடையாது அனைவரும் சமம்"- ரோகிணி சம்பவம் குறித்து நடிகர் சூரி கருத்து! - etvbharat tamil

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நான் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது, மேலும் ரோகிணி தியேட்டர் சம்பவத்திற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என நடிகர் சூரி தெரிவித்தார்.

Actor Suri
நடிகர் சூரி ஓபன் டாக்
author img

By

Published : Apr 1, 2023, 9:56 AM IST

மதுரை: வெற்றிமாறன் இயக்கத்தில் முதல்முதலாக சூரி கதாநாயகனாக நடித்து திரைக்கு வந்துள்ள திரைப்படம் விடுதலை. இப்படம் வெளியாக ரசிகர்கள் மத்தியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதைக் கொண்டாடும் விதமாக, மதுரையில் உள்ள சினிப்ரியா திரையரங்கில் ரசிகர்களோடு விடுதலை பாகம் 1 திரைப்படத்தைப் பார்ப்பதற்கு அப்படத்தின் கதாநாயகன் சூரி நேரில் வந்து ரசிகர்களோடு அமர்ந்து படத்தைக் கண்டு ரசித்தார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "விடுதலை திரைப்படம் தாமதமானதற்குப் பொதுமக்கள் காரணம் கேட்டனர். ஆனால் இவ்வளவு தாமதத்திற்கு பின்னும் நல்ல திரைப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். விடுதலை திரைப்படத்தைத் தயாரிப்பாளர்களும் ரசிகர்களும் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள். எனது குலசாமி சங்கையாவை கும்பிட்டு விட்டு திரைப்படம் பார்க்க வந்திருக்கிறேன்.

மேலும், நல்ல திரைப்படத்தை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எந்த திரைப்படத்தையும் வெற்றிப் படமாகக் கொண்டு செல்வது ரசிகர்கள் தான். நான் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படத்தை எனது ரசிகர்கள் வெற்றியுடன் கொண்டாடி வருகின்றனர். தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை விட வேறு என்ன பெருமை இருக்கிறது.

இந்த படத்திற்கோ அல்லது இந்த படத்தில் நடித்த யாருக்கு தேசிய விருது கிடைத்தாலும் அது எனக்கு கிடைத்தது போன்ற மகிழ்ச்சியை தரும். மிகப்பெரிய நடிகர் விஜய் சேதுபதியோடு நடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதற்காக ஒவ்வொரு கலைஞர்களும் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்றார்.

அதைத் தொடர்ந்து, ரோகிணி திரையரங்கில் நடைபெற்ற சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சூரி, எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்றுதான் என்பதை தெரியப்படுத்தத் தான் நான் திரையரங்கு வந்தது. நீ, நான் என்ற வேறுபாடு திரையரங்கிற்கு கிடையாது. இந்த சம்பவத்திற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். எந்த சூழலில் இது நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் திரையரங்கில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ஏஎஸ்பி முதல் டிஜிபி வரை.. ஓய்வுக்கு முன்பு கருணாசாகர் ஐபிஎஸ் செய்த அதிரடி ஆக்‌ஷன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.