ETV Bharat / state

பாட்டன், பூட்டன் விட்டுச்சென்ற பனைமரத்தை காப்போம்... நடிகர் சௌந்தர்ராஜா கருத்து - உசிலம்பட்டி

மதுரை: ஒவ்வொருவரும் தங்களது ஊரில் உள்ள கண்மாய் குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சௌந்தர்ராஜா தெரிவித்துள்ளார்.

Actor Soundararaja
author img

By

Published : Aug 16, 2019, 11:49 AM IST

Updated : Aug 16, 2019, 12:09 PM IST

தமிழில் வெளியான 'சுந்தரபாண்டியன்', 'தர்மதுரை', 'பூஜை', 'ஜிகர்தண்டா', 'தெறி' போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் செளந்தர்ராஜா. இவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு மரம் நாடும் விதமாக பனை விதைகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள கண்மாய் கரை பகுதிகளில் பனை விதைகளை அவர் நட்டார்.

பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பனைமரத்தின் பயன்கள் பலருக்கு தெரியாது. இவை பல வருடங்கள் வாழக்கூடியது. எத்தகைய வறட்சியையும் தாக்குப்பிடித்து மற்ற எல்லா வளங்களும் வற்றி வறண்டுபோன பிறகும் கூட மனித இனத்தைக் காப்பாற்றி பயன்தரக்கூடியது.

எனது சொந்த ஊரான உசிலம்பட்டியில் இயற்கையைப் பாதுகாக்கும் வகையில், பனை விதைகளை நட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதே போல் பசுமை ஆர்வலர்கள் உதவியுடன் தமிழ்நாடு முழுவதும் பனை விதைகளை நட இருக்கிறோம்.

ஒவ்வொருவரும் தங்களது ஊரில் உள்ள கண்மாய் குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வாரி சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் அதனை முறையாக பராமரிக்க இளைஞர்கள் ஆர்வதோடு செய்ய வேண்டும். நான் இந்த பனை மரங்களை நட்டதோடு மட்டுமல்லாமல், இதனை பராமரிப்பதை சவாலாக எடுத்துள்ளேன். இந்த கண்மாயை பராமரிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன் என்றார்.

Intro:உசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் - சௌந்தர்ராஜா Body:சுந்தரபாண்டியன், தர்மதுரை, பூஜை, ஜிகர்தண்டா, தெறி போன்ற படங்களில் நடித்த நடிகர் சௌந்தர்ராஜா தனது பிறந்த தினத்தை முன்னிட்டு பனை விதைகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

பனைமரத்தின் பயன்கள் பலருக்கு தெரியாது அது நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழக்கூடியது. எத்தகைய வறட்சியையும் தாக்குப்பிடித்து மற்ற எல்லா வளங்களும் வற்றி வறண்டுபோன பிறகும் கூட மனித இனத்தைக் காப்பாற்றி பயன்தரக்கூடியது. அதனை காக்கும் விதமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள கண்மாய் கரை பகுதிகளில் நடிகர் சௌந்தர்ராஜா பனை விதைகளை நட்டார்.

இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க செயலாளர் வினுபாலு, ரோட்டரி சங்கசெயலாளர் பொன்ரமேஸ், லையன்ஸ் கிளப் பிரேம், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி பள்ளி மாணவர்கள் மற்றும் 58 கிராம கால்வாய் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சௌந்தர்ராஜா பேசுகையில், எனது சொந்த ஊரான உசிலம்பட்டியில் இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் பனை விதைகளை நட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதே போல் பசுமை ஆர்வலர்கள் உதவியுடன் தமிழகம் முழுவதும் பனை விதைகளை நட உள்ளோம். ஒவ்வொருவரும் தங்களது ஊரில் உள்ள கண்மாய் குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வாரி சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் அதனை முறையாக பராமரிக்கவும் வேண்டும். இளைஞர்கள் இதனை ஆர்வத்தோடு செய்ய வேண்டும். நான் இந்த பனை மரங்களை நட்டதோடு மட்டுமல்லாமல், இதனை பராமரிப்பதை சவாலாக எடுத்துள்ளேன். Conclusion:இந்த கண்மாயை சுத்திகரிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன்.
Last Updated : Aug 16, 2019, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.