ETV Bharat / state

'ஜல்லிக்கட்டில் ரியலாகவே நடிக்க ஆசை..! கிரிக்கெட்டை போல ஜல்லிக்கட்டையும் கொண்டாடுவோம்' - நடிகர் அருண் விஜய்!

Alanganallur Jallikattu: அடுத்தப்படத்தில் மாடுபிடி வீரராக கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன் என நடிகர் சூரியும்; கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளை கொண்டாடும் நாம், ஜல்லிக்கட்டையும் கொண்டாட வேண்டும் எனவும் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரராக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எந்த டூப்பும் இல்லாமல் நடிக்கவே ஆசை உள்ளதாக நடிகர் அருண் விஜய்யும் தெரிவித்துள்ளனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 2:19 PM IST

Etv Bharat
Etv Bharat
Actor Soori and Arun Vijay visit Alanganallur Jallikattu

மதுரை: மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், இதுவரை 4வது சுற்று முடிவில் 302 காளைகள் களம் கண்டன. இதில், 102 மாடுகள் பிடிபட்டன. ஒருவர் பின் ஒருவராக, 400 பேர் வரை திமிறிப் பாய்ந்த காளைகளை திமிலைப் பிடிப்பதற்காக கட்டித் தழுவியுள்ளனர்.

இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். மேலும், அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உலக புகழ் பெற்ற இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக நடிகர்கள் சூரி, அருண் விஜய், விஜய் டிவி புகழ் நீயா? நானா புகழ் தொகுப்பாளர் சி.கோபிநாத், தமிழ் சொற்பொழிவாளரும் பட்டிமன்ற பேச்சாளருமான பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அப்போது செய்தியாளிடம் பேசிய நடிகர் சூரி, 'நமது மதுரை, நான் பிறந்த ஊரு. இன்று உலகத்தின் முக்கியமான நிகழ்வுகளில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் ஒன்று. நமது தமிழ் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பதிவு செய்துகொண்டே இருப்பதுதான் அலங்காநல்லூர். இது நமது கலாசாரத்தை காப்பாற்றிக் கொண்டு இருக்கும் ஒரு வீரவிளையாட்டு.

காளையா? காளையர்களா..? நீயா..நானா..? என்று விளையாட்டு தான் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இதனைப் பார்க்க சென்ற ஆண்டைப் போலவே இன்று வந்துள்ளேன். சென்ற ஆண்டைப் போல, எனது காளை இப்போதும் களத்தில் உள்ளது. தொடர்ந்து ஜல்லிக்கட்டைப் பார்ப்பதற்காக நான் வந்துகொண்டே இருப்பேன்' என்று தெரிவித்தார்.

இதனிடையே, 'விடுதலை - 2ல் மாடுபிடி வீரராக இருப்பீர்களா..?' என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'கண்டிப்பாக அப்படியொரு கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன்" என்று சிரித்த முகத்தோடு நடிகர் சூரி பதிலளித்தார்.

இவரைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அருண் விஜய், "மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடப்பதாக அறிந்ததுமே, எனக்கு ஜல்லிக்கட்டு பார்க்க ஆசை. அடுத்துவரும் திரைப்படங்களில் மாடுபிடி வீரராக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நிச்சயமாக, எனக்கு ரொம்ப நாள் ஆசை.

இப்படி ஜல்லிக்கட்டு உள்ளதாக ஒரு கதைக்களம் அமைய வேண்டும் என காத்திருக்கிறேன். என்னுடைய படங்களில் சாதாரணமாக டூப் போடாமல், நடிக்க வேண்டும் என விரும்புவேன். அதேபோல, ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரராக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நேரடியாக எந்த டூப்பும் இல்லாமல், நானே நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

நமது தமிழ் கலாசாரத்தை வெளிப்படுத்துவது போன்ற கதைகளில் நடிக்க எனக்கு ரொன்ப ஆசை உள்ளது. இப்போது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் விளையாடி வரும் எல்லா காளையர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளை கொண்டாடும் நாம், ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டையும் நிச்சயமாக கொண்டாட வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

இயக்குனர் பாலா இயக்கும் 'வணங்கான்' படப்பிடிப்பின் போது சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. 10 மாதங்களாக ஓய்வில் இருந்தேன். இன்னும் ஓரிரு மாதங்களில் சரியாகிடும்" என்று பேசினார்.

இதையும் படிங்க: அதிரவைக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4வது சுற்றில் சீறும் காளைகள்.. திமிலைப் பிடித்து பரிசுகளை குவிக்கும் காளையர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.