மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் அதிமுக சார்பாக வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் 1000க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு, திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் வாழும் நரிக்குறவர்கள் உள்ளிட்ட வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு கரோனா நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த எம்எல்ஏ ராஜன்செல்லப்பா கூறியதாவது, “திமுக ஏற்படுத்திய மாயையை முறியடித்து மக்கள் அதிமுக கொடுக்கின்ற நிவாரணப் பொருள்களை மனமார ஏற்றுக் கொண்டு வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை வைத்து கொண்டு இருக்கிறார்.
பொருளாதார மேம்பாட்டுக்கு இணங்க பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மத்திய அரசு கடன் நிலுவைத் தொகையை வசூலிக்கும் ஆறு மாதம் அவகாசம் கொடுத்துள்ளனர். மேலும் மூன்று மாதத்திற்குப் பிறகு தற்போது மின் கட்டணம் மாநில அரசு வசூல் செய்து வருகிறது, விவசாயத் துறையில் பல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதுபோல அரசால் முடிந்த அனைத்து திட்டங்களையும் மிகச் சிறப்பாக செய்து வருகிறோம்” என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறினார்.
இதையும் படிங்க: கட்டுப்பாட்டு அறைக்கு அமைச்சர் விஜய பாஸ்கர் திடீர் ஆய்வு!