ETV Bharat / state

தனியார் விடுதியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! - இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை: தனியார் விடுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் விடுதியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை  A Youth Commits Sucide by Hanging in madurai  A Youth Commits Sucide  Kerala youth Sucide In Madurai  இளைஞர் தூக்கிட்டு தற்கொலை  மதுரை தற்கொலை
A Youth Commits Sucide by Hanging in madurai
author img

By

Published : Feb 3, 2021, 9:28 PM IST

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகேயுள்ள பெருமாள் தெப்பம் பகுதியில் தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நேற்று (பிப். 02) கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ப்ரோஸ்கான் என்ற இளைஞர் தனிஅறை எடுத்து தங்கியுள்ளார். இன்று காலை முதல் அறையின் கதவு பூட்டியிருந்ததைத் தொடர்ந்து விடுதி ஊழியர்கள் பலமுறை கதவை தட்டியும் திறக்காததால், இது குறித்து காவல்துறையினருக்கு விடுதி ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அந்த இளைஞரின் மணிக்கட்டு வெட்டப்பட்டு அரை நிர்வாண கோலத்தில் தூக்கிட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் இளைஞரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடரந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த அந்த இளைஞர் மதுபோதையில் பிளேடால் தனது கைகளை அறுத்து பின்னர் தூக்கிட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும், வேறு ஏதேனும் காரணத்தால் உயிரிழந்தாரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பேரனிடம் தகராறு செய்த கும்பல்: தட்டிக்கேட்ட முதியவர் மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.