ETV Bharat / state

விதவை சான்றிதழுக்கு லஞ்சம் பெற்ற விஏஓ - வைரலாகும் வீடியோ - வைரலாகும் வீடியோ

மதுரையில் விதவைச் சான்றிதழ் வழங்குவதற்கு கைம்பெண்ணிடம் விஏஓ லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 28, 2022, 6:51 AM IST

மதுரை: சிவகங்கை சாலையில் மேலமடை கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு யாகப்பா நகரைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற 'விதவை சான்றிதழ்' (கைம்பெண் ஓய்வூதிய திட்டம்) வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார்.

கடந்த ஒரு மாதமாக சான்றிதழ் வழங்காததால், தன்னார்வலர் ஒருவரின் உதவியுடன் பெண் விஏஓ ரமணியிடம் சான்றிதழ் கேட்டுள்ளார். அப்போது, சான்றிதழ் தருவதற்கு லஞ்சமாக ரூ.1,000 கேட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, முதல் தவணையாக ரூ.350 விஏஓ ரமணியிடம் பெற்றுக் கொண்டார்.

மேலும், தலையாரி மலையாண்டியிடம் ரூ.250-யை கொடுத்துவிட்டு செல்லுங்கள். விதவை சான்றிதழ் அடுத்த வாரத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது. லஞ்சம் கொடுத்ததை தன்னார்வலர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'விதவை சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற விஏஓ' - வைரலாகும் வீடியோ

இதுதவிர, ஆடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் விஏஓவை போனில் தொடர்பு கொள்ளும் தன்னார்வலரிடம், ''தலையாரி மூன்று மாடி வீடு கட்டி உள்ளார். அவரும் தான் லஞ்சம் வாங்குகிறார். இந்த சின்ன விஷயத்தைப் போயி பெரியதாக்காதே'' என்கிறார். இந்த வீடியோ, ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பென்ஷன் கேட்ட விவசாயி.. இறந்தவர்கள் லிஸ்ட்டில் பெயரைக்காட்டிய ஆபிஸர்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.