ETV Bharat / state

'பெண் வட்டாட்சியர் விவகாரம் குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும்..!' - தேர்தல் அலுவலர் பேட்டி - female thasildhar

மதுரை: "மதுரையில் வாக்குப்பெட்டிகள் இருந்த பாதுகாப்பு அறைக்குள் பெண் வட்டாட்சியர் சென்ற விவகாரம் குறித்த ஆய்வறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்" என்று, கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.

சிபிஎம் வேட்பாளர் வெங்கடேஷன்
author img

By

Published : Apr 22, 2019, 11:56 PM IST

Updated : Apr 23, 2019, 11:17 AM IST

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் பாலாஜி தலைமையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக, அமமுக உட்பட அனைத்து கட்சி வேட்பாளர்களும் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்து வெளியே வந்த மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரியாமல், ஆவணங்கள் இருந்த அறையின் சாவியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கொடுக்க வாய்ப்பில்லை. வாக்கு எண்ணிக்கை மையத்தில் வட்டாட்சியர் உள்ளிட்ட 4 பேரை பிடித்து வைத்திருந்தவர்களை, ஆட்சியர் கூறியதன் அடிப்படையில் விடுவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த புகார் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்த போது, எனக்கு இந்த விவகாரம் தெரியாது என்றார். வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான, ஆட்சியர் நடராஜனை இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை வைத்தேன்" என்றார்.

தொடர்ந்து, மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்தேன். காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. சம்பவத்திற்கு காரணமான அனைத்து துறை அலுவலர்களிடன் விசாரணை மேற்கோண்டேன். இந்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பேன். அதனையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தினை பாதுகாக்கும் விதிமுறைகள் குறித்து தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளன" என்றார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
22.04.2019

மதுரை அரசினர் விருந்தினர் மாளிகையில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜியுடனான ஆலோசனைக்கூட்டத்திற்கு பின் *மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேஷன் பேட்டி...*

ஆவணங்கள் இருந்த அறையின் சாவியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரியாமல்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கொடுக்க வாய்ப்பில்லை

வாக்கு எண்ணிக்கை மையத்தில் வட்டாச்சியர் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் பிடித்து வைத்திருந்த போது ஆட்சியர் கூறியதன் அடிப்படையில் விடுவித்ததாக காவல்துறையினர் தெரிவிந்தனர்,

இந்த புகார் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்த போது,எனக்கு இந்த விவகாரம் தெரியாது என ஆட்சியர் தெரிவித்தார்,

வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான, ஆட்சியர் நடராஜனை மாற்றம் செய்ய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்தாகாக தெரிவித்தனர்.

*மதுரை அரசினர் விருந்தினர் மாளிகையில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜியுடனான ஆலோசனைக்கூட்டத்திற்கு பின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை செய்தியாளர்களை சந்தித்தார்..*

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் அத்துமீறல் என்பது மாவட்ட நிர்வாகத்தையே சந்தேகப்படும்படியான நிலை உள்ளது. 

இந்த சம்பவத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் பொறுப்பு, 
அவரை மாற்ற கோரி தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளோம், 

வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட ஒரு மாத காலத்திற்கு மத்திய சிறப்பு கண்காணிப்பாளரை நியமிக்கப்பட்ட வேண்டும், 

சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்போதுதான் உண்மை வெளிவரும், 

அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையரிடம் சமர்பிக்க உள்ளார்  எங்களது கோரிக்கையை எழுத்துபூழ்வதாக அளித்துள்ளோம் என்றார்.

மதுரை அரசினர் சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது : 

காலையில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு செய்தேன் , வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, மிண்ணனு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன, சம்பவத்திற்கு காரணமான அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்களிடன் விசாரணை மேற்கோண்டேன் , இந்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பேன், அதனையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், வாக்குஎண்ணிக்கை மையத்தில் தேர்தல் ஆணையம் வகுத்த விதிமுறைகள் பின்பற்றபட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டேன், ஆய்வறிக்கையை விரைவில் சமர்பிக்க உள்ளேன் , வேட்பாளர்களிடம் சம்பவம் குறித்து விசாரித்தேன், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் , அரசு ஊழியர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்., தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு வாக்குஎண்ணிக்கை மையத்தினை பாதுகாக்கும் விதிமுறைகள் குறித்து தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளன.

Visual send in mojo kit
Visual name : TN_MDU_03_22_ELECTION ISSUE PRESS MEET_TN10003
Last Updated : Apr 23, 2019, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.