மதுரை மாவட்டம், நிலையூர் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் சரவணன்(30). இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் துறை சார்பு ஆய்வாளரை போல உடையணிந்து டிக் டாக் செயலி மூலம் வீடியோ ஒன்றை எடுத்து பகிர்ந்தார். கலவரத்தைத் தூண்டும் விதமாக அந்த வீடியோ உள்ளதாக, திருநகர் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சரவணனை கைது செய்த காவல் துறையினர், அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.