ETV Bharat / state

தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட்டைக் கொடுத்த தாய்.. மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமி பலி! - ஸ்பிரிட்

மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் (Surgical Spirit) ஸ்பிரிட்டை அலட்சியமாக சிகிச்சை அறையில் செவிலியர்கள் வைத்ததால், குடிநீர் என நினைத்து சிறுமிக்கு கொடுத்தவிட்டதாக தாய் கண்ணீர் மல்க புகார் கூறியுள்ளார்.

akalya
அகல்யா
author img

By

Published : Jun 16, 2023, 9:45 PM IST

மதுரை: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கோ. கண்டியன் கொல்லை கிராமத்தைச் தீபா வயது (32) - ஆனந்தகுமார் வயது (43) ஆகிய இருவருக்கும் 2 பெண் குழந்தைகள் மற்றும் ஆதிஷ் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இவர்களின் இரண்டாவது மகள் அகல்யாவிற்குக் கடந்த ஆண்டு கிட்னி பிரச்சனை காரணமாகப் பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின் சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார்.போதிய சிகிச்சையின் காரணமாகத் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆகிய மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த மே 30ஆம் தேதியன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அகல்யாவிற்குக் கடந்த 15 நாட்களாக டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று மருத்துவர்கள் டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர். பின் மாலை 5 மணியளவில் அகல்யாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அகல்யா தனக்குத் தாகம் எடுப்பதாகக் கூறினார்.அப்போது சிறுமியின் தாயார் படுக்கையின் அருகிலிருந்த பாட்டில் ஸ்பிரிட் என தெரியாமல் தண்ணீர் என நினைத்துக் கொடுத்துள்ளார்.

உடனடியாக சிறுமி இது தண்ணீரின் சுவை இல்லை என நினைத்துத் துப்பினார்.அருகிலிருந்த செவிலியர் அது தண்ணீர் அல்ல. நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் ஸ்பிரிட் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமி அகல்யா சிகிச்சைக்காக அவசர வார்டிற்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.சிறிது நேரத்தில் அகல்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சிறுமியின் தாயார் பேசுகையில், "டயாலிசிஸ் அறையில் அலட்சியமாக ஸ்பிரிட் பாட்டிலை வைத்தது மருத்துவமனையின் தவறு. மேலும் எனது மகள் முழுமையாகக் குடிக்கவில்லை. சிகிச்சை அளிக்கும் அறையில் வைத்திருந்ததன் காரணமாக அவசரத்தில் தண்ணீர் என நினைத்துக் கொடுத்து விட்டேன் இருந்த போதிலும் செவிலியர்களின் அலட்சியப் போக்கினாலும் மேலும் மருத்துவர்கள் உரியச் சிகிச்சை அளிக்காத காரணத்தால் எனது மகள் இறந்து விட்டாள். ஆனால் தற்போது மருத்துவர்கள் ஸ்பிரிட் குடித்ததன் காரணமாகத் தான் இறந்ததாகத் தெரிவிக்கின்றனர்" என்றார்.

இதையும் படிங்க:தலைக்கு எவ்வளவு தில்லு பாரு.. சீருடையுடன் மு.க.ஸ்டாலினை விமர்சித்து மீம்ஸ் போட்ட போலீஸ் சஸ்பெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.