ETV Bharat / state

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் நிறைவேற்றாதது ஏன்? உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி? - Pradeep Yadav

தனக்கு வரவேண்டிய பணப்பலன்களை முறையாக வழங்க உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஞானபிரகாசம் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்

madurai high court
உயர்நீதிமன்றம் மதுரை கிளை
author img

By

Published : Jul 8, 2023, 2:36 PM IST

மதுரை: திருநெல்வேலி பழையபேட்டை கிராமத்தில் ஊழியஸ்தானம் என்ற ஆசிரியர் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இதில் ஞானபிரகாசம் என்பவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு வரவேண்டிய பணப்பலன்களை முறையாக வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அதை நிறைவேற்றாத பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் " திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டை கிராமத்தில் உள்ள ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி மையத்தில் 1966 ஆம் ஆண்டு முதல் அலுவலக உதவியாளராக, தூய்மை பணியாளராக 40 ஆண்டுகள் பணியாற்றி 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். தமிழக அரசாணை அடிப்படையில் தனக்கான முழு ஓய்வூதிய பணப்பலன்களை முறைப்படுத்தி வழங்க நீதிபதி உத்தரவிட்டும் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் ஆசிரியர் கல்வி, பயிற்சி கல்வி இயக்குனர் ஆகியோர் தனக்கு முறையாக வழங்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எனது மனுவினை பரிசீலனை செய்து பணப்பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டநிலையில் தனக்கு பணப்பலன்கள் முறையாக வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் தற்போது வரை நிறைவேற்றவில்லை எனவும் உயர் நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத கல்வித் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் கடந்த 2020ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீண்ட கால விசாரணைக்கு பிறகு மீண்டும் நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் நிறைவேற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

மேலும், தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் ஆசிரியர் கல்வி, பயிற்சி கல்வி இயக்குனர் ஆகியோர் ஜூலை 19 நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:கோவை சரக காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.