ETV Bharat / state

’99 விழுக்காடு அதிமுகவினர் ஈபிஎஸ் பக்கம் உள்ளனர்’- ஆர்பி உதயகுமார்

99 விழுக்காடு அதிமுகவினர் ஈபிஎஸ் பக்கம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

’99 சதவீத அதிமுகவினர் ஈபிஎஸ் பக்கம் உள்ளனர்..!’- ஆர்பி உதயகுமார்

author img

By

Published : Jul 30, 2022, 7:43 PM IST

மதுரை: காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகே உள்ள யூனியன் கிளப்பில் நடைபெற்ற டென்னிஸ் விளையாட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்தது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக ஆன்லைன் ரம்மி தொடர்கிறது.

தமிழ்நாட்டில் இதன் மூலம் பணத்தை இழந்த 23 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வரும் முன்னர் ஒரு பேச்சும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு பேச்சுமாக பேசுகிறார்கள்.

மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்துள்ளார்கள். எதிர்கட்சியாக இருக்கும் போது 'கோ பேக் மோடி' என்று சொன்னார்கள். ஆளும்கட்சியாக ஆன பின்னர் 'கம் பேக் மோடி' என்று சொல்கிறார்கள். திமுக என்றுமே ஒரே நிலைப்பாட்டில் இருந்ததில்லை. மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுகிறார்கள் என்பதற்கு சாட்சியாகவே பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காட்டிய நெருக்கத்தை கருத வேண்டும்.

பிரதமரிடம் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு அழுத்தம் கொடுத்து இருக்கலாம். என் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுக்கப்பட்ட புகார் அரசியல் காழ்ப்புணர்வுடன் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்தவிதமான சோதனைக்கும் நான் தயார். மரியாதை நிமித்தமாகவே பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். பிரதமரை யார் வரவேற்க வேண்டும் என்பது டெல்லியின் முடிவு.

அதிமுக யாருடைய தலைமையின் கீழ் அடுத்த தேர்தலை எதிர்கொள்வது என்பது குறித்து தலைமை முடிவெடுக்கும். தன்னுடைய ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகவும், திருப்திப்படுத்தும் விதமாகவும் ஓபிஎஸ் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்கிறார். எடப்பாடி பழனிசாமி பக்கம் 99 விழுக்காடு அதிமுகவினர் உள்ளனர். ஓபிஎஸ் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தால் அதிமுகவில் சேரலாம் என்று செல்லூர் ராஜூ கூறி இருப்பது அவருடைய கருத்து" எனக் கூறினார்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் உள்ள மணமகனுடன் வீடியோ காலில் திருமணம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.