மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று மட்டும் 98 நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 88 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை கரோனா வைரஸ் தொற்றால் 17 ஆயிரத்து 395 நபர்கள் மாவட்டம் முழுவதிலும் இருந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 ஆயிரத்து 252 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை சிகிச்சைப் பலனின்றி 397 நபர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது 746 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க: 5 மணி நேரம் தொடர்ச்சியாக கிராமிய இசைக்கருவிகளை வாசித்து சாதனைப் படைத்த இளைஞர்!