ETV Bharat / state

கடந்த எட்டு ஆண்டுகளில் 92 ரயில்வே மேம்பாலங்கள் - தெற்கு ரயில்வே தகவல் - madurai Railway Station

ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதுடன் பொதுமக்களின் நலன் கருதி கடந்த எட்டு ஆண்டுகளில் 92 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளில் 92 ரயில்வே மேம்பாலங்கள் - தெற்கு ரயில்வே தகவல்

author img

By

Published : May 31, 2022, 10:26 PM IST

மதுரை: தெற்கு ரயில்வே, ரயில்களைப் பாதுகாப்பாக இயக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இதில் முக்கியமாக ரயில் பாதை மற்றும் சாலைகள் சந்திக்கும் இடங்களில் விபத்துகள் அதிகமாக நடக்க வாய்ப்பு இருப்பதால், அந்த குறிப்பிட்ட இடங்களில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் ஆகியவை அமைக்கப்படுகின்றன.

முக்கியமாக, தெற்கு ரயில்வேயின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த எட்டு ஆண்டுகளில் 92 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ரயில் மற்றும் சாலை சந்திப்புகளில் உள்ள ஆளில்லாத ரயில்வே கேட்டுகள் மற்றும் பணியாளர் உள்ள ரயில்வே கேட்டுகள் இருந்து வந்தன. இந்நிலையில், ரயில்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும் இயக்க இந்த ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டுள்ளன.

மேலும், இதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கடந்த 8 ஆண்டுகளில் 639 ஆளில்லாத ரயில்வே கிராஸிங்குகள் மாற்று ஏற்பாடுகளுடன் மூடப்பட்டுள்ளன. அதேநேரம், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே 100% ஆளில்லாத ரயில்வே கிராசிங்குகள் மூடப்பட்டு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 262 பணியாளர் உள்ள ரயில்வே கேட்டுகளும் மூடப்பட்டுள்ளன. ரயில்களைப் பாதுகாப்பாக இயக்க ரயில்வே நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: ஐந்து ஆண்டுகள் ரயில்வேயிடம் போராடி ரூ.35ஐ திரும்பப் பெற்ற பொறியாளர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.