மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையானது அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. அவனியாபுரம் பகுதியிலுள்ள வில்லாபுரம் பூ மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக அவனியாபுரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட காவல்துறையினர், சில இளைஞர்கள் கூட்டமாக இருந்ததைக் கண்டு அவர்களிடம் விசாரணை செய்ய முன்றுள்ளனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிக்கு முயற்சித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், விசாரணை செய்தபோது அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஜெயபாண்டி, கண்ணன், சதீஷ், பிரேம்குமார், முத்துப்பாண்டி, பாண்டியராஜன் ஆகிய ஆறு இளைஞர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 5.5 கிலோ கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.
அதே போல் அவனியாபுரம் பகுதியில் காவல்துறைனர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதையடுத்டு அவர்களை மடக்கிப்பிடித்த காவல்தூறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் யோகேஷ், மணிகண்டன், அஜித்குமார் என்பதும், அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர் மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து சுமார் 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:கரோனா காலத்தில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் - உஷாராக இருக்க அறிவுறுத்தல்