மதுரை: உலகப் பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஏப்ரல் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் சித்திரைத் திருவிழா கரோனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு பக்தர்களின்றி நடைபெற்று வருகிறது.
எட்டாம் நாளான நேற்று மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டு வெள்ளி சிம்மாசனத்தில் கோயிலுக்குள்ளே பவனி வந்தார். இவருக்கு சிறப்பு ஆராதனைகளும், பூஜைகளும் செய்யப்பட்டது. இவை கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் யூடியூப் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
![8th day of chithra festival at madurai meenakshi amman temple](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-03-chitra-fest-8th-day-photos-7208110_22042021214440_2204f_1619108080_679.jpg)