மதுரையில் கரோனா வைரஸ் தொற்று மிகத்தீவிரமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி, சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து நோய் கண்டறிய முகாம்களை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைத்துள்ளன.
அதுமட்டுமன்றி 2 ஆயிரத்து 500 பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் நேற்று ( ஜூன்27) மட்டும் 218 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது ஒரே நாளில் ஏழு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுவரை சிகிச்சை பெற்று வந்தவர்களில் 548 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது 1,135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையில் இதுவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மொத்த நபர்களில் இறந்தவர்களின் விழுக்காடு 1.17 ஆகும். முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 32 விழுக்காட்டினர் ஆவர்.
மதுரையில் கரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 7 பேர் மரணம்
மதுரை: கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரே நாளில் ஏழு பேர் மரணமடைந்துள்ளனர்.