மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு இன்று ஒரே நாளில் 63 திருமணங்கள் நடைபெற்றன. வளர்பிறை சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு கூடுதலாகத் திருமணங்கள் நடைபெற்றதாகக் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
குறிப்பாக 47 திருமணங்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றன. மீதமுள்ள திருமணங்கள் திருப்பரங்குன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றன.
இதையும் படிங்க: தேசியவாதிகளை கைதுசெய்யும் அறிவாலய அரசு - அண்ணாமலை கடும் கண்டனம்