காற்று மாசுபடுவதைக் கட்டுப்படுத்த தீபாவளி பண்டிகையன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலும் இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரையிலும் பட்டாசு வெடிக்க வேண்டுமெனவும் பள்ளிகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனாலும் இதனை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
இந்த நடைமுறையை மதுரை மாநகர், புறநகர் காவல் துறையினர் கடுமையாகப் பின்பற்றினர். இந்நிலையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக மாநகர் பகுதியில் 25 பேரும் புறநகர்ப் பகுதியில் 37 பேரும் என மொத்தம் 62 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் பிணையில் வெளிவந்தனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை நகரில் நேற்று காலை முதல் இரவுவரை தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆதரவற்றோருடன் தித்திக்கும் தீபாவளியைக் கொண்டாடிய இளைஞர்கள்!