மதுரை மாவட்டத்தில் கரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கிடையில் இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 464 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அம்மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 539ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 2 ஆயிரத்து 616 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 3 ஆயிரத்து 803 பேர் சிகிச்சையில் பெற்று வருகின்றனர். அதேபோல் இன்று ஒரேநாளில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது.