சென்னை: சென்னை விமான நிலையத்தில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக இதுவரை 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் அனைத்தும் குறிப்பாக ஏடிஆர்(ATR) எனப்படும் 72 சீட்டுகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் ஆகும்.
இந்த சிறிய ரக விமானங்கள் பறக்கும் போது புயல் காற்று அடித்தால் விமானத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும். இதை அடுத்து ஏடிஆர் ரக விமானங்களின் சேவைகளை மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் வரையில் நிறுத்தி வைக்கும்படி விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை சென்னை விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தது.
அதன்படி இன்று பிற்பகலுக்கு மேல் சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறிய ரக விமானங்களான தூத்துக்குடி, மைசூரூ, கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூர், திருச்சி, மதுரை, ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதை அடுத்து மேலும் சில விமானங்களும் ரத்த ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல்: நாளை(டிச.10) பள்ளிகளுக்கு விடுமுறை?