ETV Bharat / state

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க துடிப்பது ஏன்? - சு. வெங்கடேசன் எம்பி - சு. வெங்கடேசன் எம்பி

இந்தியாவிலுள்ள 171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டி வரும் நிலையில் அவற்றை ஒன்றிய அரசு ஏன் தனியாருக்கு விற்கிறது என மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சு. வெங்கடேசன் எம்பி
சு. வெங்கடேசன் எம்பி
author img

By

Published : Aug 10, 2021, 3:44 PM IST

மதுரை: 171 பொதுத்துறை நிறுவனங்களும் லாபத்தில் இயங்குகின்றன என நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் காரத் தெரிவித்தார்.

இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் இன்று (ஆகஸ்ட் 10) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் 171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகிறது என்று நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய நிதி இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் காரத் பதில் அளித்துள்ளார்.

இணை அமைச்சர் பதில்

2019 - 20 நிதியாண்டில் 171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளன. அவற்றில் 10 மகாரத்னாக்கள், 14 நவரத்னாக்கள், 73 மினிரத்னாக்கள் உள்ளன. மகாரத்னாவாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், மினி ரத்னாக்களாக ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, கன்டைனர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, மினி ரத்னா நிறுவனங்களாக பாரத் எர்த் மூவர் லிமிடெட், பவான் ஹான்ஸ் லிமிடெட் உள்ளன. இவை கேந்திர விற்பனை வாயிலாக தனியாருக்கு விற்கப்படுமெனத் தெரிவிக்கக்பபட்டுள்ளது.

97 ரத்னாக்கள்

அமைச்சரின் பதில்கள் பொதுத்துறை நிறுவனங்களின் நல்ல செயல்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன. 171 நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகிறது என்பது மட்டுமின்றி 97 நிறுவனங்கள் "ரத்னா" க்களாக உள்ளன என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினிரத்னா என்றால் மூன்று ஆண்டு தொடர் லாபம், நவரத்னா எனில் மூன்று ஆண்டு லாபத்தோடு இன்னும் ஏழெட்டு அளவுகோல்களில் சிறப்பான செயல்பாடு, மகாரத்னா என்றால் ரூ. 5000 கோடிகளுக்கு மேல் லாபம் என்று பொருள்.

இப்படி ரத்னாக்கள் இருக்க ஒன்றிய அரசு ஏன் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கிறது. பொதுத்துறை நிறுவனங்களே தங்கக் குழிகளாக உள்ளன என்பதே உண்மை என்று அமைச்சரின் பதிலில் தெளிவாகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பெகாசஸ் விவகாரம்: பிரதமர் மோடி பதிலளிக்க மறுப்பது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.