மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை அருகேயுள்ள கீழக்குயில்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கெளதம் (23). இவர் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கெளதம் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால், சிறுமிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது, சிறுமி கருவுற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், வழக்குப்பதிவுசெய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி, கெளதமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பரமத்தியில் கூலித் தொழிலாளி போக்சோவில் கைது!