ETV Bharat / state

15 வருடங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட கோயிலில் திருட்டு; கொள்ளையன் கைது! - 15 வருடங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட கோவிலில் திருடிய கொள்ளையன் கைது

மதுரை: 15 வருடங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட கோயில் உண்டியல்களில் நூதன முறையில் திருடிய கொள்ளையனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

15 years theft Temple Undial money
15 years theft Temple Undial money
author img

By

Published : Dec 23, 2019, 2:39 PM IST

மதுரை ரிசர்வ் லைன் ஆயுதப்படை மைதானம் அருகே புகழ் பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் வாசலில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் படுத்திருப்பதை அறிந்த காவல் துறையினர், அருகில் சென்று பார்த்தபோது அவர் வைத்திருந்த கம்பி மூலம் படுத்துக்கொண்டே நூதன முறையில் கோயில் உண்டியல் பணத்தை திருடிக் கொண்டு இருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவரை பிடித்து தல்லாகுளம் காவல் நிலையம் அழைத்து வந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பதும், இவர் கடந்த 15 வருடங்களாக மதுரை மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் இரவு நேரங்களில் நூதன முறையில் உண்டியலில் உள்ள பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

கோயிலில் திருடிய கொள்ளையன் கைது

அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த தல்லாகுளம் காவல் துறையினர், அவரிடம் இருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய கம்பி, பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஏடிஎம் கார்டு மூலமாக வாக்காளர்களுக்குப் பணப் பரிமாற்றம்

Intro:*மதுரையில் 15 வருடங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் உண்டியலில் நூதன முறையில் திருடிய கொள்ளையன் கைது*Body:*மதுரையில் 15 வருடங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் உண்டியலில் நூதன முறையில் திருடிய கொள்ளையன் கைது*

மதுரை ரிசர்வ் லைன் ஆயுதப்படை மைதானம் அருகே புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது,இந்த மாரியம்மன் கோவில் வாசலில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் படுத்து இருப்பதை அறிந்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அருகில் சென்று பார்த்தபோது அவர் வைத்திருந்த கம்பி மூலம் படுத்துக்கொண்டே நூதன முறையில் கோவில் உண்டியல் பணத்தை திருடிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது,அதனை தொடர்ந்து அவரை பிடித்து தல்லாகுளம் காவல்நிலையம் அழைத்து வந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பதும்,இவர் கடந்த 15 வருடங்களாக மதுரை மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் இரவு நேரங்களில் நூதன முறையில் உண்டியலில் உள்ள பணத்தை நூதனமான முறையில் கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது, அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த தல்லாகுளம் காவல்துறையினர் அவரிடம் இருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய கம்பி மற்றும் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள், 15 வருடங்களாக யாரிடமும் சிக்காமல் சந்தேகம் வராத வகையில் கோவில்களில் உண்டியல் பணங்களை திருடி வந்ததாக கொள்ளையடித்த தகவல் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.