ETV Bharat / state

மதுரையில் கி.பி.13ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு!

மதுரை மாவட்டம், வில்லூர் அருகே சித்தூரில் 700 ஆண்டுகள் பழமையான அய்யனார் சிற்பம் மற்றும் நடுகல் ஆகியவை தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

நடுகல் கண்டுபிடிப்பு
நடுகல் கண்டுபிடிப்பு
author img

By

Published : Mar 17, 2022, 3:51 PM IST

மதுரை: சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் அனந்த குமரன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.

அப்போது கண்மாய் கரையில் பாதி புதைந்த நிலையில் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் மற்றும் கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நடுகல் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் து.முனீஸ்வரன் கூறியதாவது, "இப்பகுதி பாண்டியர் ஆட்சிக்காலத்தில் வீரநாராயண வளநாடு எல்லைக்குட்பட்ட பொற்பாத தேவி சதுர்மங்கலம் என்றும், இங்கு பழமையான சிவன் கோயிலில் சித்தர்கள் தவம் செய்ததாகவும் சித்தர் என்ற பெயர் சித்தூர் என மருவியதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வூரின் கண்மாய் மடைப்பகுதி அருகே 3 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்டு பாதி புதைந்த நிலையில் அய்யனார் சிற்பம் இருந்தது.

நடுகல் கண்டுபிடிப்பு

தலைப்பகுதியில் அடர்த்தியான ஜடாபாரம், இரண்டு காதுகளிலும் வட்ட வடிவ பத்ர குண்டலங்கள், கழுத்தில் கண்டிகை, சவடி, சரப்பளி அணிகலன்களுடன் மார்பில் முப்புரி நூலுடன் இச்சிற்பம் அமைந்துள்ளது. பட்டையான உதரபந்தம் மார்பையும் வயிற்றுப்பகுதியையும் பிரிக்கிறது. இடுப்பில் கச்சுடன் சுகாசன கோலத்தில் இடது காலை பீடத்தில் அமர்த்தி, வலது காலை தொங்கவிட்டு, வலது கரத்தில் கடக முத்திரை கொண்ட செண்டை ஆயுதம் சிதைந்த நிலையில், இடது கையை தனது தொடையின் மீது வைத்து அழகாக காட்சி தருகிறார். இதன் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

சங்ககாலம் முதற்கொண்டு போரில் வீர மரணமடைந்த வீரனுக்கு நடுகல் வைத்து வழிபடும் முறை இருந்தது. சித்தூரில் கண்டறியப்பட்ட நடுகல் 4 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்டுள்ளது. வீரனின் இடுப்பில் கச்சையுடன் கூடிய குறுவாள், வலது கையில் நீண்ட பட்டகத்தியும் இடது கையில் இடுப்பில் செருகப்பட்ட வாள் பிடித்தவாறும் காட்சி தருகிறான். நீண்ட தலைப்பாகை கொண்டு காது, மார்பில் அணிகலன் அணிந்து, கை மற்றும் காலில் வளையல் அணிந்து நின்றவாறு வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்ப அமைப்பைக்கொண்டு பார்க்கும்போது இதன் காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்" என்றார்.

இதையும் படிங்க: 12-14 வயதினருக்கான தடுப்பூசி திட்டம் தொடக்கம் - முதல் நாளிலில் 2.6 லட்சம் பயனாளிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.