மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேவுள்ள ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேல்முருகன், செல்வி தம்பதியினர். இவர்களது மகன் பிரகாஷ் (13). இவர் தனது தாத்தாவுடன் வாடிப்பட்டி அருகேவுள்ள குட்லாடம்பட்டியில் மாந்தோப்பில் விளையாடிக்கொண்டிருந்தார்.
அங்கு, குழந்தைக்காக அமைக்கப்பட்டிருந்த சேலை தொட்டிலில், பிரகாஷ் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சேலையில் கழுத்து இறுகி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த வாடிப்பட்டி காவல் துறையினர், சிறுவன் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 150 அடி ஆழ கிணற்றிலிருந்து அழுகுரல்... மீட்கப்பட்டும் 4 வயது சிறுவன் உயிரிழப்பு!