மதுரை: துபாயிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை வந்த இரு பயணிகளிடம் 1201 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது. அதன் மதிப்பு ரூபாய் 50 லட்சம்.
மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவுப்பிரிவினருக்கு, கடத்தல் தங்கம் வருவதாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, சுங்கத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் சந்தேகத்திற்குரிய நபர்களிடம் விசாரணை செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் பிடிபட்டனர்
அதில் ராமநாதபுரம் மாவட்டம், புதுமாயக்குளத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் அஜித் குமார் (23) என்பவரிடமிருந்து ரூ.40.50 லட்சம் மதிப்புள்ள 981.68 கிராம் தங்கம் பிடிபட்டது.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், நாச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த சேர்வைகாரன், ஊரணி மேலத்தெரு களஞ்சியம் என்பவரது மகன் பாலமுருக குமார் (27) என்பவரிடமிருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள 220 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து சுங்கத்துறையினர் இருவரிடம் தங்கம் கடத்தி வரப்பட்டது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கட்டப்பையில் வைத்து பெண் குழந்தை கடத்தல் - சிசிடிவியை வைத்து விசாரணை