மதுரை மாவட்டம் திருமங்கலம் சோழவந்தான் சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள்கள் கொண்டுவருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
![](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9457119_kutka.jpg)
அப்போது திருமங்கலம் முகமது ஷாபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்த அமானுல்லா என்பவர் இருசக்கர வாகனத்தில் மூன்று மூடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் கொண்டு வந்தது தெரியவந்தது. அவரை விசாரணை செய்ததில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த விமல்(35) என்பவரிடம் குட்கா பொருள்கள் வாங்கி வந்ததாக கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது, இரண்டு குட்கா மூட்டைகளை கைப்பற்றியதோடு, சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 119 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, திருமங்கலம் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை: ஒருவர் கைது