ETV Bharat / state

மதுரை அருகே கி.பி. 10ஆம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு! - மதுரை மாவட்ட செய்திகள்

தே.கல்லுப்பட்டி அருகே, கி.பி.,10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு
மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு
author img

By

Published : Jul 19, 2021, 7:19 PM IST

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், தே.கல்லுப்பட்டி அருகே உள்ள வேளாம்பூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேரையூரை அடுத்த வேளாம்பூரில், பழமையான சிற்பம் ஒன்று இருப்பதாக, கவசக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர்களுக்குத் தகவல் கொடுத்தார்.

அதன்படி, மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் வழக்கறிஞர் நாகபாண்டி, சிவக்குமார் ஆகியோர் வேளாம்பூர் மாரியம்மன் கோவில் பின்புறத்தில் களஆய்வு செய்தனர்.

மாகவீரர் சிலை

அப்போது, சிதைந்த நிலையில் இருந்த சிற்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது,சமண சமயத்தின் 24ஆவது தீர்த்தங்கரரான மகாவீரரின் சிற்பம் எனத் தெரிய வந்தது.

அச்சிற்பம் குறித்து, தொல்லியல் ஆய்வாளர் பேரா. முனைவர் து. முனீஸ்வரன் கூறியதாதவது, "அழிந்த ஊரில் அழியாத வரலாற்று தடயங்களுடன், இன்றும் அரசாங்க பதிவேட்டில் மட்டுமே காணப்படும் கிராமம் தான் வேளாம்பூர்.

இந்த கிராமத்தில் அடர்ந்த முட்புதரில் சிதைந்த நிலையில் 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட சிற்பம் ஒன்றை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

அந்த சிற்பத்தில், வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் 24ஆவது தீர்த்தங்கரரான மகாவீரர் திகம்பரராக தியான கோலத்துடன் இருக்கிறார். நீண்ட துளையுடைய காதுகள், விரிந்த மார்புடன் இருக்கும் சிற்பத்தில் முகம் தேய்ந்து காணப்படுகின்றது.

மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தின் மீது அமைந்த சிம்மாசனத்தில், அர்த்த பரியங்காசனத்தில் (பாதங்கள் இரண்டும் மேல் நோக்கி இருக்கும்படி, ஒரு கால் மீது மறுகாலை மடித்து அமர்வது) யோகமுத்திரையுடன் தியான நிலையில் அமைதி தவழும் திருக்கோலத்தில் இந்த மகாவீரர் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிதைந்த நிலையில் சிற்பம்

மகாவீரருடைய தலையின் பின்புறமாக மூன்று காலத்தையும் உணர்த்தும் விதமாக ஓளி வீசும் பிரபா வளையமும், மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்த விநோதம், சகல பாசானம் எனும் முக்குடையும், பின்புலத்தில் குங்கிலிய மரமும் இருந்திருக்க வேண்டும்.

சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் நிற்கும் உருவங்கள் உள்ளன; இவை உடைந்த நிலையில் காணப்படுகின்றன.

சமீபத்தில் கவசக்கோட்டை செங்கமேடு பகுதியில் கண்டறியப்பட்ட மகாவீரர் சிற்பத்துடன், இந்த சிற்ப உருவத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது, இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதாலம்.

இதன் மூலம், இந்தப் பகுதியிலும், ஒரு சமண பள்ளி வழிபாட்டில் இருந்து அழிந்திருப்பதை நம்மால் அறிய முடிகிறது. இவ்வூர் அருகிலுள்ள காரைக்கேணியில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளதும் இங்கு கருதத்தக்கது. இப்பகுதியில் சிதறிக்கிடக்கும் செங்கற்கள் மூலம் இங்கு இருந்த சமணப்பள்ளி முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டதாக அனுமானிக்கலாம்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு சோதனைக் களம் அல்ல... சமூக நீதியின் பலி பீடமும் அல்ல’ - சு.வெங்கடேசன் எம்பி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.